சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து அலுவலர் திரு.ஜட்சன் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தேர்தல் விழிப்புணர்வை எடுத்துரைத்தார். இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.