"With God all things are possible" -Matthew 19:26
"With God all things are possible" -Matthew 19:26

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்.
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் தூத்துக்குடி நேரு யுவகேந்திராவும் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இசக்கி விழிப்புணர்வு எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு வாக்களிப்பது அவசியத்தை பற்றி உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி நாட்டு நல பணி அலுவலர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். உடற்கல்வி இயக்குனர் மாதவன் மற்றும் ஜாஸ்பர் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி டாக்டர். ஜேஸ்பர்லின், செல்வரதி ,ஜாக்சன், ஆனந்தி,துணை பேராசிரியர் தாமஸ், கனகராஜ், பிரைட்சன், ஆனந்த், வின்சென்ட் நேரு யுவகேந்திரா தேசிய இளைஞர் தொண்டர்கள் செல்வ சுபா, செல்வ லிங்கம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts