சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை மற்றும் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு விநாயகம் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு எடுத்துரைத்தார். வாகன ஆய்வாளர் தனபால் வாகன விதிமுறைகளை எடுத்துரைத்தார் இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் துணை பேராசிரியர் கனகராஜ் பிரைட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Step into a bright future with GUPCE! Admissions for the 2026-2027 academic year are now open. Reserve your seat today for a successful and fulfilling journey ahead!